Tuesday 25 January 2022

குக் வித் கோமாளி சீசன் 3 - கன்டஸ்டன்ட்ஸ்


தமிழ் மக்களுக்கு இந்த ஆண்டின் மிகச்சிறந்த ரியாலிட்டி ஷோவாக 
மாறப்போகும் குக் வித் கோமாளி சீசன் 3 போட்டியாளர்களை அறிமுகம் செய்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

1.குக்குகள் 
 
1.ரோஷினி

         இவர் விஜய் தொலைக்காட்சியில் பாரதிகண்ணம்மா தொடரில் கதாநாயகியாக நடித்தவர் தவிர்க்க முடியாத காரணங்களால் அத்தொடரில் இருந்து விலகியவர் இந்த நிகழ்ச்சி மூலம் ரீ என்ட்ரீ கொடுத்துள்ளார்.

2. வித்யூலேகா ராமன்
        இவர் ஒரு திரைப்பட நகைச்சுவை நடிகையாவார். சந்தானம், சதீஷ் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.

3. மனோபாலா
         இவர் ஒரு திரைப்பட இயக்குனர் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார். ஒரு சில திரைப்படங்கள் இயக்கியுள்ள இவர் இருநூறுக்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்துள்ளார்.

4. அந்தோனிதாசன்
         இவர் பிரபலமான நாட்டுப்புற இசை கலைஞர் மற்றும் திரைப்பட பாடகர் மேலும் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

5. தர்ஷன்
         இவர் தும்பா கனா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் மேலும் மாடலிங் துறையிலும் சிறந்து விளங்குபவர்.

6. சந்தோஷ் பிரதாப்
         இவர் ஒரு மாடல் ஆவார் மற்றும் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் பாக்ஸராக நடித்துள்ளார்.

7.அம்மு அபிராமி
         இவர் அசுரன் ராட்சசன் உள்ளிட்ட திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

8. கிரேஸ் கருணாஸ்
         இவர் திரைப்பட நகைச்சுவை நடிகர் கருணாஸின் மனைவி ஆவார். விஜய் தொலைக்காட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் உள்ளார்


2. கோமாளிகள்

1 . பாலா 

         இவரை பற்றிய அறிமுகம் நிச்சயம் தேவையில்லை. சிறுசு பெறுசு என அனைத்து தரப்பினரும் இவருக்கு ரசிகர்கள் தான். மேலும் முதல் சீசனில் இருந்து இந்நிகழ்ச்சியில் பங்கபெற்றுள்ளார்

2.சிவாங்கி 
         இவரும் இரண்டு சீசன்களிலும் பங்கு பெற்றுள்ளார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர். நல்ல பாடகியும் கூட.

3. மணிமேகலை

          இவர் சன் டிவி மற்றும் விஜய் தொலைக்காட்சியில் பணி புரிந்துள்ளார்.
கடந்த சீசன்களிலும் பங்கு பெற்றுள்ளார்.

4. சுனிதா
          இவர் நல்ல நடன கலைஞர் ஆவார். ஜோடி நம்பர் ஒன்  ஷோ போன்ற நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர். கடந்த சீசன்களிலும் பங்கு பெற்றுள்ளார்.

5. மூக்குத்தி முருகன்

         இவர் சூப்பர் சிங்கர் சீனியர் கடந்த சீசன் முதல் பரிசு பெற்றவர். பல்வேறு திறமைகளை கொண்ட இவருக்கு இது தான் முதல் சீசன்.

6. பரத்
         இவர் சூப்பர் சிங்கர் சீனியர் கடந்த சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர். நகைச்சுவை உணர்வு கொண்ட போட்டியாளர்.
 
7. குரேஷி
        இவர் கலக்கப் போவது யாரு சீசன் 5 வெற்றியாளர்.

8. ஷக்தி

         இவர் சமுக வலைதளங்களில் பிரபலமான டிக் டாக்கில் பிரபலமான ஒருவர்